search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில கூடைப்பந்து போட்டி"

    சென்னையில் ரைசிங் ஸ்டார் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை நடக்கிறது. #basketball

    சென்னை:

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 15-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (27-ந்தேதி) முதல் மே 5-ந்தேதி வரை நடக்கிறது. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கிறது.

    ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் வங்கி, வருமானவரி, ஐ.சி.எப்., தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஆயுதப்படை அரைஸ் ஸ்டீல் உள்பட 67 அணிகள், பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் அரைஸ் ஸ்டீல், ஜேப்பியார் இன்ஸ்டிடிட், ரைசிங் ஸ்டார் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 20 அணிகள் என மொத்தம் 87 அணிகள் பங்கேற்கின்றன.

    அரைஸ் ஸ்டீல் மற்றும் சத்யம் சினிமாஸ் ஆதரவுடன் நடக்கும் இப்போட்டியின் மொத்த பரிசுதொகை ரூ.2 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் போட்டி நடக்கிறது. மேற்கண்ட தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்தார். #basketball

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.
    சென்னை:

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 14-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடலில் வருகிற 30-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 22-ந்தேதிக்குள் செயலாளர் 63/76 புதுத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்று ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார். #tamilnews
    தேனியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. #LoyolaCollege #Champion
    தேனி:

    தேனி எல்.எஸ்.எல்.மில் கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டிகளில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. இதில் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடந்தது. இதில் சென்னை லயோலா கல்லூரி அணியும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பரபரப்பான இறுதிப் போட்டி மாலையில் நடந்தது. ஆரம்பம் முதலே லயோலா கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. இறுதியில் 73:44 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 2-வது இடம் பிடித்தது. இந்த போட்டித் தொடரில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3-வது இடமும், சென்னை டி.ஜி. வைஸ்னவா கல்லூரி அணி 4-வது இடமும் பெற்றது.

    இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எல்.எஸ்.எல்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், இணை நிர்வாக இயக்குனர் பிரபாகரன் மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், கூடைப்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். 
    ×